×

புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மனிதகுலம் அழிந்து போகும்: ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை

கெய்ரோ: புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மனிதகுலம் அழிந்து போகும் என ஐ.நா. பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார். பருவநிலை மற்றம் தொடர்பான 27-ம் ஆண்டு ஐ.நா.உச்சி மாநாடு எகிப்த்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உரையாற்றிய ஐ.நா.பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் புவி வெப்பமயமாதலை தடுக்க உலக நாடுகள் கால நிலை ஒற்றுமை ஒப்பந்தத்தை உருவாக்கவேண்டும். இல்லை எனில் தானாகவே கூட்டு தற்கொலை ஒப்பந்தம் உருவாகிவிடும் என எச்சரித்தார். புவி வெப்பமயமாகும் வேகத்தை பார்த்தல் நகரத்தை நோக்கி அதிவிரைவு சாலையில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம் என்பது தெளிவாக தெரிகிறது என கூறிய அன்டோனியோ குட்டரெஸ் நாம் ஒன்றுபட்டால் உயிர்பிழைக்கலாம் அல்லது அழிந்து போகலாமே என தெரிவித்தார். புவி வெப்பமயமாதலால் ஏற்படும் பாதிப்புகளை வளரும் நாடுகளை அதிகம் சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். …

The post புவி வெப்பமயமாதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மனிதகுலம் அழிந்து போகும்: ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : UN General Secretary ,Cairo ,UN ,General Secretary ,Antonio ,
× RELATED பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக...